நாம் மற்றொரு ஊரடங்கின் நடுப்பகுதியில் இருக்கும் நாம், சூழ்நிலையில் முன்பு எப்போதையும் விட தற்போது சுய பராமரிப்பு போன்றவை தற்போது மிகவும் முக்கியமானதாகும். மற்றவர்களுக்கு எந்தளவுக்கு சிறப்பான முறையில் உதவும் அதே சமயத்தில் உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். சுயபராமரிப்பு என்பது உடல், மனம் அல்லது ஆரோக்கிய ரீதியாக உங்களை மேம்படுத்துவதற்கான எண்ணற்ற நடைமுறைகளைக்
கொண்டதாகும். செய்திகள் மற்றும் தகவல்களால் நீங்கள் அதிக தாக்கத்திற்கு ஆளாகியிருந்தால், அவற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, சுயபராமரிப்பு நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது உங்கள் மனதுக்கு மனநிறைவையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர்வதற்கு, அதிக நேரம் தேவைப்படாத எளிமையாந 5 சுயபராமரிப்பு யோசனைகளை பின்வருமாறு காண்போம்.
- 01. தூக்கத்திற்கு முக்கியத்துவம்
- 02. உடற்பயிற்சி
- 03. சருமப் பராமரிப்பு செய்து கொள்ளுங்கள்
- 04. கொஞ்சம் இசையைக் கேளுங்கள்
- 05. உங்கள் வீட்டில் அதிக பதட்டத்தைத் தவிருங்கள்
01. தூக்கத்திற்கு முக்கியத்துவம்

குறிப்பாக தூங்கச் செல்வதற்கு முன், செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களை அதிகம் பார்ப்பவர்களாயிருந்தால், உங்கள் தூக்கத்தையும், நிம்மதியையும் அது வெகுவாக பாதிக்கும். தற்போதைய சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்வது கட்டாயமாதலால், தினந்தோறும் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களை பார்ப்பதை சிறிது நேரத்திற்கு தவிர்க்க வேண்டும். கணிணி திரை அல்லது சின்னத்திரை பார்க்கும் ஒட்டுமொத்த நேரத்தையும் குறைப்பதற்கு முயற்சியுங்கள். தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே கேஜ்ஜெட்ஸூகளிடமிருந்து விலகியிருங்கள். சீக்கிரமாகவும், நல்ல தூக்கமும் வருவதற்கு தியானம் செய்வது மிகவும் உதவியாக இருக்கும்.
02. உடற்பயிற்சி

எந்தவிதமான உடற்பயிற்சியுமின்றி வீட்டிலேயே அடைந்து கிடைப்பது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமானதல்ல. உடற்பயிற்சி செய்வதினால் வெளிப்படும் என்டார்பின்ஸ் என்ற ஹார்மோன்கள் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகின்றது. மேலும், நாள்பட்ட மற்றும் மோசமான நோய் பாதிப்பைக் குறைக்கின்றது. நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களின் ஆற்றலை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த மனநிலையையும் மேம்படுத்தவும், தினசரி 20-30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் போதுமானது.
03. சருமப் பராமரிப்பு செய்து கொள்ளுங்கள்

சுயமாக தங்களைப் பராமரித்துக் கொள்ளுவதே சிலப் பெண்களுடைய சருமப் பராமரிப்பின் உச்சக் கட்டமாகும். முகத்தில் முகப்பூச்சுப் பூசிக் கொள்வதினாலும், தானே சுயமாக ஃபேசியல் செய்து கொள்வதினாலோ நீங்கள் மிகுந்து அமைதியாக உணர்கிறீர்கள் என்றால் அதையே செய்யுங்கள். அதற்கு ஒரு சில நிமிடங்களே ஆகும். மேலும் அவை உங்களுக்கு நல்ல மனஅமைதியைத் தரும். நன்றாகத் தேய்த்து, அத்தியாவசிய எண்ணெய் குளியலுடன் நீண்ட நேரம் குளிப்பது உங்களுக்கு மிகவும் மனதுக்குப் பிடித்திருந்தால், அப்படியே செய்யுங்கள். உங்களுக்கு மனஅமைதியும், புத்துணர்ச்சியும் தரக் கூடிய எதை வேண்டுமானாலும் அதைச் செய்யுங்கள்.
04. கொஞ்சம் இசையைக் கேளுங்கள்

தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சிறிது நேரம் இசையை கேளுங்கள். மனஅழுத்தம் மற்றும் பதட்டத்துடன் இருக்கும் மக்களின் மனரீதியான பிரச்னைகளைக் குறைப்பதோடு, சுயமரியாதையையும் அதிகரிக்கின்றது. நீங்கள் கேட்டு மகிழக் கூடிய நல்ல நினைவுகளுடன் கூடிய ஒரு பாட்டுப்பட்டியலை உருவாக்கிக் கொள்ளுங்கள் அல்லது நேர் எதிர்மறையான எண்ணங்களை உங்கள் மனதிலிருந்து அகற்றக் கூடிய சில பசுமையான நினைவுகளையும் நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
05. உங்கள் வீட்டில் அதிக பதட்டத்தைத் தவிருங்கள்

அதிக பதட்டம் மனஅழுத்தத்தையும், மனகவலையையும் ஏற்படுத்தக் கூடியது. தற்போது மிகுந்த இரைச்சல் அல்லது குழப்பமான சூழ்நிலையில் தற்போது உங்கள் இல்லம் இருக்குமானால், அவை மிகுந்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது உங்கள் தூக்கத்தை பாதிப்பதோடு, கார்டிசோல் என்ற மனஅழுத்த ஹார்மோனின் அளவை அதிகரிக்கின்றது. உங்கள் வீட்டின் ஒரு சிறியப் பகுதியை தேர்ந்தெடுத்து, உங்களுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தக் கூடிய தேவையற்ற அனைத்தையும் அதில் தூக்கி எறிந்து விடுங்கள். பிறகு மீதமுள்ளவற்றை சீர் செய்யுங்கள். இது உங்கள் மனதில் உள்ள தேவையற்ற விஷயங்களை நீக்குவதோடு, ஏதோ ஒன்றை சாதித்த மனநிறைவும் ஏற்படும்.
Written by Team BB on 2nd Jul 2021